தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Friday, January 27, 2012

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


மலேசியாவில் நாம் இருபது இலட்சம் பேர்தான் இருக்கிறோம். சீனர்கள் நம்மை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்தாலும் ஏதாவது பிரச்னை வந்தால் எல்லோரும் ஒன்றுபட்டு விடுவார்கள் – அவர்கள் ஆளும் கட்சியிலும் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் தங்கள் சமுதாயதிக்கோ, தாய் மொழிக்கோ, கோவில்களுக்கோ ஏதாவது பாதகம் ஏற்பட்டால் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவர். நம் சமுதாயம் மட்டும் இதில் விதிவிலக்காக இருக்கிறது.
அனைவருக்கும் நன்றாக தெரியும் – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு -  ஒற்றுமை இல்லாமல் பிரிந்து வாழ்ந்தால் நமக்கு அழிவே வரும். நமது இனத்தின் மேலும், தாய்மொழியின் மேலும் அதிக பற்றுதல் வையுங்கள்!

Saturday, January 14, 2012

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்

இனிய தமிழ்புத்தாண்டு் & பொங்கல் நல்வாழ்த்துகள் 
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு 
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே 
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் 
தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு...!
 *அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்*