தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Wednesday, January 12, 2011

இண்டர்லொக் புத்தகத்தை மீட்டுக் கொள்க

பள்ளி பாடத்திட்டத்திலிருந்து இண்டர்லொக் புத்தகத்தை அரசாங்கம் மீட்டுக் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட புத்தகத்தில் இந்திய சமூகத்தை புண்படுத்தக்கூடிய கருத்துரைகள் இடம்பெற்றிருப்பது குறித்து சமுதாய கல்வியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
அதேசமயம் இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளரின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பவில்லை, எனினும்  நாவவில் படைப்புத்தன்மை இறுதியில் தவறாக சித்தரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
சம்பந்தப்பட்ட நாவலில் "மணியம் இதர இந்தியர்களைப் போல் தன் மனைவியின் பாதுகாப்பை கருதியதில்லை" போன்ற வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற கருத்துரைகள் மாணவர்களிடையே இன வெறுப்பினை உண்டாக்கும்.
ஆகையால் இந்த நாவல் பாடப்புத்தகத்திலிருந்து கட்டாயம் நீக்கப்பட வேண்டும். கல்வி அமைச்சரும் அதன் துணையமைச்சரும் இந்த விவகாரத்தை சீர்தூக்கி பார்த்து உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

No comments:

Post a Comment