தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Monday, January 17, 2011

இந்திய சமுதாயத்தில் சமுதாயத்தில் சாதி சங்கங்கள் தலை விரித்தாடுவது ஏன்?


இண்டர்லோக் நாவல் சாதித்துவேஷம் செய்கிறது என்று இந்திய சமுதாயத்தில் பரவலாக எதிர்க்கப்படுகிறது. ஆனால் அதே சமுதாயத்தில் சாதி சங்கங்கள் தலை விரித்தாடுவது ஏன்? என்று உத்துசான் மலேசியாவில் அவாங் செலமாட் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவர் கட்டுரையின் சாரம்சம்:
1. இண்டர்லோக் நாவலை ஒட்டு மொத்த இந்திய சமுதாயமே எதிர்க்கவில்லை.  பல இந்திய தலைவர்களும், கல்வியாலர்களும், அரசு சார்பற்ற இயக்கத்தை சேர்ந்தவர்களும் இந்த நாவலில் உணர்ச்சிவயப்பட எதுவும்மில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். 20ம் நூற்றாண்டு தொடக்கத்தில் அன்றைய காலனித்துவ காலத்தில் மூன்று இனங்களுக்கு இடையில் நிலவிய நல்லிணக்கத்தையே இந்த நாவல் படம் பிடித்து காட்டுகிறது.

2. இண்டர்லோக் நாவல் இனத்துவேஷம் செய்கிறது என்றால் , இந்த இந்திய சமுதாயத்தில் ஏன் இத்தனை சாதி சங்கங்கள் உலவுகின்றன. அதுமட்டுமல்லால், அவற்றின் நடவடிக்கைகளை தமிழ்ப்பத்திரிகைகளும் வெளியிட்டு கொண்டிருக்கின்றன.

3.இந்திய அரசியலும் இந்த சாதிக்கு விதிவிலக்கல்ல. மறைந்த டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன் கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அதன் பிறகு அவரி சார்ந்த எத்தனை பேர் ம. இ.கா.வின் உயர் பதவிகளை அடைந்திருக்கிறார்கள்? இதற்கு மூலக்காரணம் சாதிப் பிரிவினைகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

4. இந்திய சமுதாயத்தில் பலர் தங்கள் பெயருக்கு பின் சாதிப் பெயரை போட்டுக் கொள்கிறார்கள்.  திருமணத்திற்கு கூட சாதி பார்ப்பது பலரிடம் காணப்படுகிறது.

5. இந்தியர்களுக்கு இந்தியர்கள் தான் எதிரி. மற்ற இனத்தவர்கள் யாரும் எதிரியல்ல. இந்திய சமுதாயத்தில் தலைவிரித்தாடும் சாதிப் பிரிவினைகள் அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக விளங்குகின்றன.

6. இந்திய சமுதாயத்தில் சாதிய வேறுபாடு தேவையில்லை என்று பெரும்பாலன தலைவர்கள் உணர்கிறார்கள். ஆனால், அப்படி சொல்லிக் கொண்டே இன்னமும் அவர்கள் சாதிப்பிரிவினைகளைத்தான் பின்பற்றுகிறார்கள் இந்த பிரிவினைகளிலிருந்து மக்களை மீட்க எந்த அரசியல் கட்சியும் அக்கறை காட்டுவதில்லை.

No comments:

Post a Comment