தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Monday, January 17, 2011

தேசிய சேவை பயற்சியில் ஈடுபட்டுள்ள இந்து மாணவர்களுக்கு தைப் பூசத்திற்காக விடுமுறை அளிக்க வேண்டும்

 

தேசிய சேவை பயற்சியில் ஈடுபட்டுள்ள இந்து மாணவர்களுக்கு தைப்பூசத்திற்காக விடுமுறை அளிக்க வேண்டும் என இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் ம.இ.கா தேசிய தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் குறிப்பிட்டுள்ளார். மேலும், மலேசிய இந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து ஆண்டுதோறும் கொண்டாடும் திருவிழா தைப்பூசம். இந்த திருவிழாவில் இந்துக்கள் குடும்ப சகிதமாக சென்று தங்கள் வேண்டுதலை முருகனுக்கு நிறைவேற்றுவார்கள். ஆகையால், பாதுகாப்புத்துறை அமைச்சர் தேசிய சேவை பயற்சியில் ஈடுபட்டுள்ள இந்து மாணவர்களுக்கு தைப்பூசத்திற்காக மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment