தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Saturday, January 8, 2011

Enthunan V.Nagandran: இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

Enthunan V.Nagandran: இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்: "பொங்கலோ பொங்கல்!, எல்லோருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! 2011 ஆம் ஆண்டு உலகில் உள்ள எல்லோரும் நலமுடன்..."

5 comments:

  1. எவன் எக்கேடு கெட்டாலும் நான் நிம்மதியாக வாழ வேண்டும்” என்பதே இளைய தலைமுறையின் தாராக மந்திரம். எனக்கு ஒரு நல்ல வேலை, கை நிறைய சம்பளம் நன்கு அதை அனுபவிக்க கேளிக்கை விடுதிகளும் மற்ற சமாச்சரங்களும் இருக்கின்றன. நான் பிறந்த இந்த சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்கவும், இதனை சற்று திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்கின்றனர். இதற்கேற்றாற்போல் வீட்டிற்கு ஒரே பையன் என்று செல்லமாக வளர்த்து, அவனுக்கு சமுதாய சிந்தனையையும் பொதுவுடைமை கருத்தையும் புகட்டாமல் வளர்த்து வருகின்றனர் அவர்களது பெற்றோர்கள்.

    ReplyDelete
  2. மனித நாகரீக வளர்ச்சியில், உலகளாவிய சமூகத் தொடர்புகளில் மொழியே முதன்மையான இடம்பெறுகிறது.ஒருவருக்கு எத்தனை மொழிகள் தெரிகிறதோ, அந்தளவிற்கு அவரின் வெற்றி சமூகத்தில் உறுதிசெய்யப்படுகிறது. அன்றிலிருந்து இன்றுவரை, வேற்று மொழிகளை கற்கும் ஆர்வம் உலக மக்களிடையே அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் அபரிமித விஞ்ஞான வளர்ச்சியும், உலகளாவிய பொருளாதார தாராளமயமாக்கலும் வேற்றுமொழி பயிலும் ஆர்வத்தை தூண்டுவதோடு, அதன் அவசியத்தையும் அதிகரிக்கின்றன.

    ReplyDelete
  3. தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

    ReplyDelete
  4. நம்மில் பலருக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு கவலை இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவர் எவ்வளவு செழிப்பாக வாழ்கிறார். அவரைப் போல நாம் இல்லையே என்று பிறரைப் பார்த்து கவலைப்படும் மனோபாவம். பணக்காரனை பார்த்து ஏழை இப்படி நினைக்கிறான். பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவன் பிரச்சினைகள் ஏதுமின்றி மகிழ்ச்சியாய் உள்ளவனைப் பார்த்து கவலைப்படுகிறான். ஆரோக்கியமானவனைப் பார்த்து உடல் நலம் குன்றியவன் அவனைப் போல் நாம் ஆரோக்கியமாக இல்லையே என்று கவலைப்படுகிறான். கருப்பாக இருப்பவன் சிவப்பாய் இருப்பவனைப் பார்த்து நாம் அவரைப் போல சிவப்பாக இல்லையே என்று கவலைப்படுகிறான்.

    ReplyDelete
  5. Love Is The Selfless Promotion Of The Growth Of The Other

    ReplyDelete