இறைவன் படைப்பில்
அனைவரும் சமம்…
இறைவன் படைத்த ஆற்றலில்
அனைவரும் சமம்.
ஏற்றத்தாழ்வில்லா
இறைவன் படைப்பில்
சிகரம் தொட்டவர்கள்
சிலர் மட்டுமே…
முயற்சியின்மையால்
முடங்கிப் போனோர் பலர்…
தன்னம்பிக்கையும்
விடாமுயற்சியும் இருப்பவர்களுக்கே
சிகரங்கள் சிரம் தாழ்கிறது…
வெற்றி தேவதை
வெண்சாமரம் வீசுகிறாள்
கூட்டுப் புழுக்களாய்
இருந்தது போதும்…
முயற்சி சிறகுகளை விரியுங்கள்
வண்ணத்துப் பூச்சிகளாய்
உலகை வலம் வருவோம்…