தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Thursday, January 20, 2011

தேசிய பயிற்சித் துறை சீக்கிய சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் - ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ பழனிவேல்


தேசிய சேவைப் பயிற்சியில் இருந்த 17 வயது பாசந்த் சிங் என்ற சீக்கிய மாணவரின் தலைமுடி அறுக்கப்பட்ட சம்பவத்திற்கு தேசிய சேவைத் துறை சீக்கிய சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ பழனிவேல் தெரிவித்தார்.
இது சாதாரண விஷயம் அல்ல. உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடியது. தேசிய பயிற்சி அதிகாரிகள் பொறுப்பில் இருக்கும் போதுதான் இந்த அடாவடித்தனமான செயல் நடந்திருக்கிறது. 
ஆகவே பயிற்சி அதிகாரிகள் கண்டிப்பாக சீக்கிய சமூகத்திடம் மன்னிப்புக்கு கேட்க வேண்டும் என்று பழனிவேல் குறிப்பிட்டார்.
உடனே இது குறித்து மன்னிப்பு கேட்டு விட்டால் இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து விரும்பத்தகாத சர்ச்சைகளை உண்டு பண்ணாது என்று அவர் கூறினார்.
பிறந்ததில் இருந்தே தலைமுடியை வெட்டாதவர் பாசாந்த் சிங். கடந்த செவ்வாய்க்கிழமை இவர் தேசிய சேவைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 10 பேருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவருடைய தலைமுடியை யாரோ அறுத்து இருக்கிறார்கள். இதனால் இந்த மாணவர் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்.

No comments:

Post a Comment