தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Wednesday, January 19, 2011

Penang Thaipusam

In Penang, the 116-year-old silver chariot of Lord Muruga makes its way through Jalan Datuk Keramat to Jalan Air Terjun today as Hindus begin celebrating Thaipusam, and devotees as well as tourists break coconuts to mark the event.

1 comment:

  1. முருகப் பெருமானுக்கு சிறப்பாக எடுக்கப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது தைப்பூசத் திருநாள் ஆகும்.

    மலேசிய முழுவதும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் தைப்பூச கொண்டாட்டம் இப்போதே களைகட்ட ஆரம்பித்து விட்டது.

    சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், பினாங்கு தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி ஆலயம், கெடா சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், பேராக் ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம் உட்பட மேலும் பல திருத்தலங்களில் இந்துக்கள் தைப்பூசத்தை கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

    தைப்பூசம் நாளை கொண்டாடப்பட்டாலும் இந்துப் பெருமக்கள் பலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

    காவடி தூக்கியும் பால்குடம் சுமந்தும் அவர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் பத்துமலை திருத்தலத்துக்கு தைபூசத்தைக் கொண்டாடச் செல்லும் பக்தர்கள் வாகன நெரிசலை தவிர்ப்பதற்கு பொதுப்போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இத்திருநாளை முன்னிட்டு கேடிஎம் நிறுவனம் இன்று தொடங்கி நாளை இரவு வரை கூடுதல் ரயில் சேவையை வழங்கி வருகிறது.

    அந்தச் சேவையை 80 ஆயிரம் பக்தர்களுக்கும் அதிகமாக பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே, கெடா சுங்கைப்பட்டாணி ஸ்ரீசுப்பிரமணியர் ஆலய தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சிறப்பு வருகை மேற்கொள்கிறார்.

    ReplyDelete