தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Tuesday, January 25, 2011

இண்டர்லோக் நாவல் தடை ஒன்றே தீர்வு : அரசு சார்பற்ற இயக்கங்கள்

இண்டல்லோக் நாவலில் சில திருத்தங்கள் செய்து வெளியிட வேண்டுமென்ற பேச்சுக்கே இடமில்லை. அந்நாவலை முற்றாக தடை செய்ய வேண்டும் என அரசு சார்பற்ற இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.  நேற்று இரவு பெட்டாலிங் ஜெயா மலேசிய இந்து சங்க தலைமையகத்தில் நடைபெற்ற அரசு சார்பற்ற இயக்கத் தலைவர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 60 இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இண்டர்லோக் நாவல் குறித்து அவர்கள் கூறுகையில், ஒரே மலேசிய கொள்கைக்கு எதிராக ஒரு சமுதாயத்தை இழிவுப்படுத்தி பள்ளிகளில் இந்த நாவல் வழங்குவதை ஏற்க முடியாது. 
ம.இ.கா தேசிய தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் இந்த நாவலை மீட்டு கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என அவர்கள் கூறினார்கள்.
இண்டர்லோக் நாவல் மீட்டு கொள்ளவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் "இண்டர்லோக் நடவடிக்கை குழு" (Interlok Action Committee).
இந்த குழுவில் பாலா தம்பிலிங்கம், சிஎம் கோபாலன் மற்றும் அருண் துரைசாமி (மலேசிய இந்து சங்கம்), ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராகிம் (சுயேட்சை), ஜி.கிஷோர் (மலேசிய இந்திய மாணவர்கள் கழகம்), அழகேஷ் பத்துமலை (மலேசிய இந்திய இளைஞர் கழகம்), எ.முரளி (தமிழன் உதவும் கரங்கள்), எபி இராஜரத்தினம் மற்றும் வி.சுப்பையா (மலேசிய இந்தியர் இயக்கங்கள் ஒருங்கிணைப்பு பேரவை).
இண்டர்லோக் நூல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று கோரும் கடிதம் ஒன்று இன்று பிற்பகல் மணி 12.30 அளவில் பிரதமர்துறை இலாகாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment