தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Sunday, January 23, 2011

நமது இளைய சமுதாயத்தினரிடம் தமிழ் விழிப்புணர்வு குறைந்துவிட்டதா...?

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். 
இன்னும் நம் இளைய சமுதாயத்தினரும், பெற்றோர்களும், சமுதாய தலைவர்களும் தமிழ் மொழி உதாசினப்படுத்த ஆரம்பித்தால், கூடிய விரைவில் நம் வருங்கால தலைமுறையினர் தமிழ் என்பது முன்பு இந்தியாவில் தென் பகுதியில் பேசப்பட்ட மொழி என்று சரித்திர பாடப் புத்தகத்தில் படிக்கும் நிலை வரலாம்.
நம் நாட்டில் பல தமிழ் பத்திரிக்கைகள், நாளேடுகள் பல உள்ளன. தமிழ் எவ்வாறு நமது நாட்டில் மறையும் என கேட்கலாம். நம் நாட்டில் அதிகமாக தமிழ் பேச மற்றும் எழுத தெரிந்தவர்களில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிக உள்ளனர். இனி அடுத்த தலைமுறையினர். வரும் பொழுது இது இன்னும் குறையலாம். 
அதுமட்டுமல்ல இணையத்தில் மலேசியா தமிழர்களின் தமிழ் பங்களிப்பு மிகவும் முறைவு. உலகில் உள்ள பல தமிழ் இணையத்தளங்களில் "உலகத் தமிழர்கள் செய்தி" பிரிவில் மலேசிய தமிழ்களை பற்றிய செய்தியை நாம் காண்பதே அரிது. பேஸ்புக்கில் பல மணி நேரம் செலவு செய்யும் நம் இளைய சமுதாயம் தமிழில் ஒரு ப்ளாக் (blog) எழுத தயங்குகிறார்கள்.
ஏற்கனவே நம் நாட்டில் மக்கள் தொகையோடு தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவர்களில் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எங்கள் பகுதியில் தமிழ் பள்ளி இல்லை, ஆரம்ப பள்ளி வரை தமிழ் படிக்க முடிகிறது, தமிழ் படிப்பதால் வேலை கிடைப்பதில் சிரமம் என நாம் ஆயிரம் காரணம் சொல்லி தமிழை புறக்கணிப்பதை விட அதை கற்க ஒன்றினைந்து புதிய வழியை உருவாக்க வேண்டும். இதனை நம் தமிழ் சமுதாய தலைவர்கள் செய்வார்களா...?

No comments:

Post a Comment