தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Saturday, January 29, 2011

சமயம் என்பது மனிதனுடைய மனதை சமைப்பது...

சமயம் என்பது மனிதனுடைய மனதை சமைப்பது... அரிசி சற்று கடினமான பொருள். அதை கொதிக்கின்ற நீரில் போட்டு வேக வைத்தலை சமைத்தல் என்று சொல்கிறோம். ஒரு பெண் வாழ்க்கைக்கு பக்குவப்பட்டுவிட்டால் என்றால் அதை சமைந்து விட்டாள் என்று சொல்கிறோம். அதே மாதிரி மனிதனுடைய மனம் பல எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் மாறுபட்டு இருப்பதை நெறிப்படுத்துவது சமயம். அந்த சமயத்தில பக்தி என்பது இறைவன் மீது அன்பு செலுத்துவது. ஆன்மீகம் என்பது ஒரு அடிப்படை நெறியை நமக்கு புகட்டுவது. 
ஆகவே பக்தி என்பது அன்பின் வழியாக இறைவனை அடைவதற்கு உரிய நெறி. ஆன்மீகம் என்பது சமயத்தை தெரிந்து கொள்வதற்கு உரிய வகுப்பு போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டது. இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் கோவிலில் நடக்க வேண்டும் என்று காட்டுவது ஆன்மீகம். ஆன்மாவை இகப்படுத்துவது ஆன்மீகம்.
பக்தி வழிபாட்டில் ஆகம வழிபாடும் இருக்கிறது. பக்தி வழிபாடும் இருக்கிறது. சிவகோச்சாரியாருடய வழிபாடு ஆகம வழிபாடு. கண்ணப்ப நாயனாருடைய வழிபாடு பக்தி வழிபாடு. ஆனால் பக்திக்குத்தான் இறைவன் அனுக்கிரகம் செய்தான்னு எல்லாரும் சொல்றாங்க. அதே நேரத்தில சிவகோச்சாரியாருடைய கனவிலதான் சுவாமி வந்தார். அதனால், வளர்ச்சி அடைந்தவர்களுக்கு ஆகம நெறியும்... வளர்ச்சி அடையாதவர்களுக்கு.... குறிப்பாக கோவிலுக்கு போயி அப்பனே முருகா.. எனக்கு நீண்ட ஆயுளைக்கொடு... செல்வத்தைக் கொடு.. பிள்ளைகளுக்கு படிப்பைக் கொடு... அப்படின்னு கேப்பாங்க" அவங்களுக்கு பக்தி வழிபாடும் சொல்லப்பட்டிருக்கிறது. 
அதே மாதிரி சிறு தெய்வ வழிபாடுன்னு சொல்லக்கூடிய மாடன் காடன் என்பது எல்லாம் சிவனைக் குறிக்கின்ற சொற்கள்தான். மாடன் என்றால் செல்வம் உடையவன் என்று பொருள். மாடு என்றால் என்றாலே செல்வம்தான். அதே மாதிரி சுடலைக் காட்டில் இருப்பதால் சிவபெருமானுக்கு காடன் என்றும் பெயர். வளர்ச்சி அடைந்த பின்னர் வார்த்தையில் வித்தியாசம் உருவாகிறது. அதை ஆகமம் என்று சொன்னார்கள். இரண்டு வகையிலும் இறைவன் அனுக்கிரகம் செய்வார் என்பது கண்ணப்ப நாயனாரின் வழிபாட்டில் தெரிகிறது. ஆகவே பக்தி என்பது கண்ணப்ப நாயனாரின் வழிபாடும், ஆன்மீகம் என்பது சிவகோச்சாரியாரின் வழிபாடும் ஆகும்.

No comments:

Post a Comment