தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Sunday, January 23, 2011

அறிஞர்கள் கொடுத்துள்ள முடிவுதான் ம.இ.கா.வின் நிலைப்பாடும்

இண்டர் லோக் நாவல் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்று ம.இ.கா. அமைத்த அமைத்த அறிஞர்கள் குழு ஆழமாக ஆய்வு நடத்தி முடிவை பரிந்துரை செய்துள்ளது. அறிஞர்கள் கொடுத்துள்ள முடிவுதான் ம.இ.கா.வின் நிலைப்பாடும். ம.இ.கா. அதில் இருந்து பின்வாங்காது என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் கூறினார்.

இண்டர் லோக் நாவல் பற்றி கல்வி அமைச்சுடன் கலந்துரையாடல் நடத்தி அதில் இருக்கும் அம்சங்கள் அகற்றப்பட வேண்டுமா.. இல்லை நாவலே மீட்டுக் கொள்ளப்படவேண்டுமா... என்பதை ஆய்வு செய்ய அண்மையில் பேராசிரியர் டாக்டர் டி. மாரிமுத்து தலைமையில் ம.இ.கா. அறிஞர்கள் குழு ஒன்றை அமைத்தது.

நாவல் குறித்து அந்தக் குழு அணுக்கமாக ஆராய்ந்து, நாவலை மீட்டுக் கொள்வதுதான் சிறப்பான தீர்வாக அமையும் என்று கருத்துக் கூறியிருக்கிறது. இந்த முடிவில் ம.இ.கா.வின் நிலைப்பாடு என்ன என்பதை டத்தோ பழனிவேல் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்.

இதனிடையே, இந்த நாவல் பற்றி பேசிய கல்வி அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்," நாவலை மீட்டுக் கொள்வதை விட.. அதில் இருக்கும் சர்ச்சைக்குரிய வாசகங்களை அகற்றுவதை விட.. அந்த வார்த்தைகள் குறித்து புத்தகத்தின் பின் பக்கத்தில் விளக்கக் குறிப்புகளைத் தரலாம். அதை படிக்கும் மாணவர்கள் அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு என்பதைப் புரிந்து கொள்வார்கள்" என்று கூறியிருந்தார்.

ஆனால் அது சரியான தீர்வாக இருக்காது. அதனால் மேலும் குழப்பம் தான் உருவாகும். ஆகவே, கல்வி அமைச்சு காரணங்களைக் கூறிக் கொண்டிருக்காமல் இந்த நாவலை மீட்டுக் கொள்ள சரியான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்று டத்தோ பழனி குறிப்பிட்டார்.

இண்டர் லோக் நாவல் பிரச்சினை முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே போவது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஒரே மலேசியா கொள்கைக்கு பின்னடைவைக் கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.

மாணவர்கள் மத்தியில் தவறான சிந்தனையை ஏற்படுத்தும் என்பதோடு மனரீதியான பாதிப்புகளையும் உண்டு பண்ணும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்திய சமுதாயத்தை இளைய தலைமுறையினர் எதிர்காலத்தில் இண்டர் லோக் நாவலை அடிப்படையாக வைத்து பார்க்கும் நிலை உருவாக அரசாங்கம்  அனுமதிக்கக் கூடாது.

பாலியல் கல்வியை பள்ளிக்கூடங்களில் போதிக்கலாம் என்றும் மாணவர்களிடையே பாலியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தவறான போக்குகளைத் தடுக்க அது உதவும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக கல்வியாளர்களால் ஆலோசனை கூறப்படுகிறது.

அதைக் கருத்தில் கொண்ட கல்வி அமைச்சு பாலியல் கல்வி குறித்து பரவலாக ஆய்வு நடத்தி வருகிறது. பாலியல் கல்வி வேறு ஏதேனும் பாதிப்புக்களை ஏற்படுத்தி விடுமோ என கல்வி அமைச்சு ஆழமாக ஆய்வு நடத்தி வருகிறது.

அது மாதிரிதான் இண்டர் லோக் நாவல் பிரச்சினையையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் சாதக பாதகங்களை அணுக்கமாக ஆராய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அதே நேரத்தில் ம.இ.கா. அமைத்த அறிஞர்கள் குழு எடுத்திருக்கும் முடிவை நடைமுறைப்படுத்த ம.இ.கா. தொடர்ந்து பாடுபடும். அந்த நிலையில் இருந்து மாறாது என்று டத்தோ பழனிவேல் தெரிவித்தார்.

8 comments:

  1. இந்திய சமுதாயத்தின் நோக்கம் இண்டர் லோக் நாவல் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும். அல்லது சர்ச்சைக்குரிய வாசகங்கள் நீக்கப்படவேண்டும் என்பதுதான். இது சம்பந்தப்பட்ட கோரிக்கையில் சுருதி பேதம் இருக்கக்கூடாது. குற்றம் சுமந்த கோரிக்கைகள் பலத்தை அதிகரிப்பதற்கு பதிலாக பலவீனத்தைக் கூட்டி விடும் என்பது காலம் உணர்த்திய... உணர்த்துகின்ற... உணர்த்தப் போகின்ற உண்மையாகும்.

    ReplyDelete
  2. அந்த நாவல் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் போது அதில் சுருதி பேதம் இருக்கக் கூடாது. நீங்கள் ஆளும் கட்சிக் கூட்டணியில் இருக்கிறீர்கள்.. நீங்கள்தான் இதைத் தீர்க்க வேண்டும் என்று சற்று ஓரங்கட்டி ஒலிப்பது இண்டர் லோக் நாவலை மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையின் ஆற்றலைக் குறைத்து விடும் என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

    நமது சமுதாயத்தில் பல தேவைகள் தீர்க்கப்படாமல் போனதற்கும் அல்லது புறந்தள்ளப்படுவதற்கும் முக்கிய காரணம் அது சம்பந்தமாக தரப்படும் அழுத்தம் தனித்தனியாக இருப்பதுதான். ஒட்டுமொத்த சக்தி வெளிப்படாவிட்டால் நியாயமான கோரிக்கைக்கூட ஓரங்கட்டப்படும் என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும்.

    இண்டர் லோக் நாவல் குறித்து அமைக்கப்பட்ட குழு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. அது ம.இ.கா. மூலமாக கல்வி அமைச்சுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.

    அந்த ஆய்வுக் குழு சமர்ப்பித்திருக்கும் பரிந்துரையை கல்வி அமைச்சு கவனத்தில் எடுத்து இண்டர் லோக் நாவலில் இடம்பெற்று இருக்கும் சர்ச்சைக்குரிய வாசகங்கள் அகற்றப்படுவதற்கு இப்போது தேவை இந்திய சமுதாயத்தின் ஒட்டு மொத்த ஆதரவு.

    ReplyDelete
  3. இப்பாட நூலைப் படிக்கப்போகும் ஒவ்வொரு இந்திய மாணவனின் தகப்பன் யார் என்ற கேள்வியை எழுப்பும் இலக்கியப் படைப்பு இது.

    இதோ ஒன்று:
    “Maniam seperti orang India yang lain, tidak pernah khuatir tentang keselamatan isterinya”
    (பக்கம் 218).

    மற்ற இந்தியர்களைப்போல தன் மனைவியின் பாதுகாப்பைப்பற்றி மணியமும் கவலைப்பட்டதே இல்லை.

    இதன் கருத்து என்ன? உள்நோக்கம் என்ன? இது இந்தச் சொல், அந்தச் சொல் பற்றிய விவகாரம் அல்ல.

    இந்நாவலுள் சாதியம் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, பல்வேறு கோணங்களில் தமிழர்களின் வாழ்வியலும் பண்பாட்டுக்கூறுகளும் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதற்குரிய சான்றாக இந்நாவலுள் குறிக்கப்பட்டுள்ள செய்திகள் கீழுள்ளவாறு தொகுக்கப்பட்டுள்ளன:

    1900-ஆம் ஆண்டிலிருந்து நாடு விடுதலைப் பெற்றது வாயிலாக மலாய்க்காரர், தமிழர், சீனர் ஆகிய மூவினத்தாரிடயே நிலவிய தொடர்பினையும் ஒற்றுமையினையும் தெளிவுறுத்தும் நோக்கத்திற்காக இந்நாவல் எழுதப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், அடிப்பட நோக்கம் அஃதன்று என்னும் உண்மையை மேற்காணும் குறிப்புகளின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ஓர் இனத்தாரையும் அவர்கள் சார்ந்துள்ள பண்பாட்டினையும் இழிவு செய்வதற்கு இவ்வளவு போதாதா? இதற்கு என்ன சாக்குப்போக்குச் சொல்லவிருக்கின்றனர்?

    ஒற்றுமையே நம் வாழ்வு, நம் பண்பாடு, என முழங்கிக் கொண்டிருக்கும் இந்நாட்டின் கல்வியகங்களில் எத்தகைய சிந்தனகள் புகுத்தப்பட வேண்டுமென்னும் தெளிவற்றிருக்கின்றோம். இது வியப்பிலும் வியப்பாக இருக்கின்றது.

    ReplyDelete
  4. இண்டர்லோக்கில் உள்ள குறுநாவலால் இந்நாட்டுத் தமிழர்களின் மனம் ஒட்டுமொத்தமாகப் பாதிப்புற்றுள்ளதை மறுப்பதற்கில்லை. ஒரே மலேசியா, ஒரே இனம், ஒரே பண்பாடு, ஒற்றுமையே நம் வாழ்வு என்றெல்லாம் ஓதிக்கொண்டிருக்கும் இந்நாட்டில் இத்தகைய நாவல் எழுதப்பட வேண்டியதன் தேவையென்ன? இத்தகைய நாவலைப் பள்ளி மாணவர்களுக்குரிய பாடநூலாக்குவதற்கான தேவையென்ன? ஒன்றுமே புரியவில்லை

    ReplyDelete
  5. Novel interlok tidak sesuai untuk pelajar. kandungan novel kena dibaca dan dikupas secara terperinci semasa menjawab soalan novel. Guru-guru juga menghadapi masalah untuk mengajar dan menerangkan maksud kandungan tulisan. sebagai guru yang mengajar bahasa melayu di sekolah menengah, secara ikhlas saya berpendapat novel ini tidak sesuai. Kandungan novel akan menjadi bahan ejekan. Misalnya, watak dan perwatakan maniam.Jika kata-kata sensitif digunakan oleh pelajar, ini akan menambahkan masalah dalam kalangan pelajar. Tak cukupkah masalah disiplin di sekolah? Sebagai manusia yang boleh berfikir dengan waras , pihak kementerian pelajaran dan kerajaan BN perlu menjaga sensitiviti kaun lain sebab kita semua Melafazkan ikarar “kepercayaan kepada Tuhan. sekian

    ReplyDelete
  6. இன்று 23.1.2011 பினாங்கில் இண்டர்லோக் பாடநூலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஒன்பது பேரை, ஐந்து பெண்கள் உட்பட, போலீசார் கைது செய்தனர்.

    தாசெக் குளுகோரிலுள்ள தாமான் தேசா புரியில் ஆர்ப்பாட்டம் செய்த அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். கலைந்து செல்ல மறுத்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மலேசிய தமிழ் மாணவர்கள் குழு என்று கூறிக்கொண்ட அந்த ஒன்பது பேரும் 18 லிருந்து 42 வயதுக்கிடையிலானவர்கள். எவ்வித அனுமதியும் இன்று அவர்கள் அங்கு காலை மணி 10.10 க்கு கூடினர்.

    இண்டர்லோக் நாவல் இந்திய சமூகத்தின் மிகத் தாழ்ந்த சாதியினரை “பறையா” என்று கூறியதின் மூலம் இந்திய சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளது. ஆகவே, அந்நூல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தடை செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

    கலைந்து செல்லுமாறு இட்ட உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் தாசெக் குளுகோர் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது

    ReplyDelete
  7. அரசாங்கத்தின் அணுகுமுறை எதுவாக இருந்தாலும் அது எல்லாக் காலகட்டத்திலும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே நிலையான அணுகுமுறையாக அமைய வேண்டும். அப்போதுதான் அரசாங்கத்தின் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கை வலுப்படும்.

    ReplyDelete
  8. The BN government immediately withdraw the novel 'Interlok' from the national school syllabus.

    ReplyDelete